/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கனிமொழி தி.மு.க.,வில் செல்லாக்காசு
/
கனிமொழி தி.மு.க.,வில் செல்லாக்காசு
ADDED : ஜன 05, 2025 10:24 PM
திருவொற்றியூர், மேற்கு பகுதி அ.தி.மு.க., சார்பில், வட்டச் செயலர், நிர்வாகிகள், பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில்,  நடந்தது.
பின்,  முன்னாள் அமைச்சர் பொன்னையன் அளித்த பேட்டி:
தமிழகம் கொந்தளிக்கும் வகையில் நடந்தேறிய, அண்ணா பல்கலை விவகாரத்தில், 'யார் அந்த சார்?' என்பதை காவல் துறை மூடி மறைக்கிறது.
பாலியல் வன்புணர்வுகள், இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளது. சிறைக்கு செல்லக் கூடிய வகையில், பணத்தை சுரண்டிய தி.மு.க., மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆதாரங்களை வைத்துக் கொண்டு, மத்திய காத்துக் கொண்டிருக்கிறது.
கனிமொழி தி.மு.க., அரசியலில் செல்லாக்காசாக உள்ளார். ஸ்டாலின் உடன் பிறந்த தங்கையாகவே கருதவில்லை. அவர் பொம்மையாக உள்ளார்.
- பொன்னையன்,
அ.தி.மு.க.,
முன்னாள் அமைச்சர் 

