/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியருக்கு பாலியல் வன்கொடுமை 'கராத்தே' மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை
/
மாணவியருக்கு பாலியல் வன்கொடுமை 'கராத்தே' மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை
மாணவியருக்கு பாலியல் வன்கொடுமை 'கராத்தே' மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை
மாணவியருக்கு பாலியல் வன்கொடுமை 'கராத்தே' மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஆக 14, 2025 12:41 AM

சென்னை, பள்ளி மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, அண்ணா நகர் பகுதியில், கராத்தேயின் ஒரு பிரிவான 'ஜூடோ' எனும் தற்காப்பு கலை பயிற்சி மையத்தை நடத்தி வந்தவர் கெபிராஜ், 41. இவர், கெருகம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பகுதி நேர தற்காப்பு கலை பயிற்சியாளராக, சில ஆண்டுகள் பணியாற்றினார்.
கடந்த 2014ம் ஆண்டு தன்னிடம் பயிற்சி பெற்ற மாணவியரை, போட்டிக்காக நாமக்கல் அழைத்து சென்றுள்ளார். போட்டி முடிந்த பின், நாமக்கல்லில் இருந்து ஈரோடு ரயில் நிலையத்துக்கு காரில் வந்தபோது, 19 வயது மாணவிக்கு கெபிராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவி ஏழு ஆண்டுகளுக்கு பின், கடந்த 2021ம் ஆண்டு அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கெபிராஜ் மீது பாலியல் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், கெபிராஜை கைது செய்தனர்.
இந்நிலையில், கெபிராஜ் மீது சென்னையைச் சேர்ந்த மற்றொரு பெண் புகார் அளித்ததை அடுத்து, வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. மாணவியர் பலரிடம், கெபிராஜ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
சென்னை அல்லிக் குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தரப்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.எம்.ரவீந்திரநாத் ஜெயபால், 2022 மே 19ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கெபிராஜ் 'குற்றவாளி' என, கடந்த 11ம் தேதி நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து, கெபிராஜுக்கான தண்டனை விபரங்கள், நேற்று பிற்பகல் அறிவிக்கப்பட்டன. அப்போது, 'கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி எஸ்.பத்மா தீர்ப்பளித்தார்.

