/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக 'கர்ண வித்யாலயா' அரங்கு
/
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக 'கர்ண வித்யாலயா' அரங்கு
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக 'கர்ண வித்யாலயா' அரங்கு
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக 'கர்ண வித்யாலயா' அரங்கு
ADDED : ஜன 17, 2024 12:08 AM

சென்னையில் நடந்துவரும் புத்தக காட்சியில், பார்வையற்றோர் கல்விக்காக இயங்கி வரும் 'கர்ண வித்யாலயா அமைப்பு' சார்பில் அரங்கு எண் 2 அமைக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளே இந்த அரங்கின் நிர்வாகிகளாக உள்ளனர்.
அரங்கிற்கு வருகை தந்த ரகுராமன், 45 கூறியதாவது:
நந்தனம் அரசுக் கல்லுாரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிகிறேன். என்னைப் போன்ற பார்வையற்றோருக்கும் தமிழ் இலக்கியங்களைப் படிக்க ஆர்வமாக உள்ளது.
பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல நாவல்களை படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எங்கள் மொழியில் பதிப்பிக்கப்பட்டால் தானே நாங்களும் படித்து அதைப்பற்றி விவாதிக்க முடியும்!
இதற்கென்று பெரிய செலவு ஆகாது. படைப்பாளிகளுக்கும், பதிப்பாளர்களுக்கும் மின் வாசிப்பான் செயலி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
அண்மையில் எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியலை மையமாக வைத்து நிர்மல் என்பவர் எழுதி உள்ள 'சகாக்கள்' என்ற புத்தகத்தை 'மின் வாசிப்பான்' செயலி வாயிலாக படித்தேன்.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை முறை, செயல்பாடுகள், அறிவுத் திறன், இந்தச் சமூகத்திடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் அடிப்படைக் கட்டமைப்புகள் உள்ளிட்ட விஷயங்களை உரிய தரவுகளோடு எளிய மொழி நடையில் கூறிஉள்ளார்.
மாற்றுத் திறனாளிகளான எங்களையும் உங்களோடு இணைத்து, நாங்களும் இந்தச் சமூகத்தின் ஓர் அங்கம் என்று பாருங்கள்.
எங்களுக்கு இருக்கும் தடைகளை எப்படி நீக்க முடியும் என எங்களிடமும் கேளுங்கள். எங்களைப் பற்றிய உங்கள் மதிப்பீடுகளை மாற்றி அமையுங்கள்.
ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் உடல் குறைபாட்டை அடைந்தே தீருவர். எனவே, உடல் குறைபாடு என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் என்பதை தீர்க்கமுடன் நம்புங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

