/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
40 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு எம்.எல்.ஏ., கருணாநிதி பெருமிதம்
/
40 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு எம்.எல்.ஏ., கருணாநிதி பெருமிதம்
40 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு எம்.எல்.ஏ., கருணாநிதி பெருமிதம்
40 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு எம்.எல்.ஏ., கருணாநிதி பெருமிதம்
ADDED : டிச 25, 2024 12:13 AM

மேற்கு மாம்பலம்,சென்னை தென்மேற்கு மாவட்டம், தி.நகர் கிழக்கு பகுதி, 134 மற்றும் 134 'அ' வட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, 'ஏன் வேண்டும் தி.மு.க.,' என்ற தலைப்பில், விளக்க உரை கூட்டம், மேற்கு மாம்பலத்தில் நேற்று நடந்தது. ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில், தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசுகையில், ''முதல்வர் ஸ்டாலின் கூறியதுபோல், ஓட்டு போட்டவர்களுக்கும், ஓட்டு போடாதவர்களுக்குமாக தி.மு.க., அரசு செயல்படும். அதன்படி, இப்பகுதியில், 40 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வாக, மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன. நம் பணியை நாம் தொடர்ந்து செய்வோம். ஓட்டுகள் தானாக வந்துவிடும்,'' என்றார்.
தென் சென்னை எம்.பி., தமிழச்ச தங்கபாண்டியன் பேசுகையில்,''வானில் இருக்கும் நட்சத்திரங்களில் சில சூரியனாக வேண்டும் என்று குதிக்கின்றன.
ஆனால், அனைத்து நட்சத்திரங்களும் சூரியனாக முடியாது. 'உதய அண்ணா' என்று அழைக்கும் அளவிற்கு, துணை முதல்வர் உதயநிதி, மக்களின் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டது,'' என்றார்.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., த.வேலு பேசுகையில், ''தி.மு.க., ஆட்சி அதிகாரத்திற்காக உருவான இயக்கம் அல்ல; தமிழ் சமுதாயத்திற்காக உருவான இயக்கம். ஏதோ நடித்துக் காட்டி மக்களை மயக்கி வந்தது இயக்கம் கிடையாது. மக்கள் உணர்வை உணர்ந்து, அவர்களுக்காக உருவான இயக்கம்,'' என்றார்.
தி.நகர் மேற்கு பகுதி செயலரும், கவுன்சிலருமான ஏழுமலை பேசுகையில், ''தி.மு.க.,வை குடும்ப கட்சி என்கின்றனர். இந்தக் கட்சி குடும்பம் போல்தான் இருக்கிறது. வாரிசு அரசியல் என்கின்றனர். தாத்தா, அப்பா, மகன் என பல தலைமுறைகளாக, தமிழக மக்களுக்காக உழைத்து வருகின்றனர்,'' என்றார்.