/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புரட்டாசி மஹாளய அமாவாசை வெறிச்சோடிய காசிமேடு மீன் சந்தை
/
புரட்டாசி மஹாளய அமாவாசை வெறிச்சோடிய காசிமேடு மீன் சந்தை
புரட்டாசி மஹாளய அமாவாசை வெறிச்சோடிய காசிமேடு மீன் சந்தை
புரட்டாசி மஹாளய அமாவாசை வெறிச்சோடிய காசிமேடு மீன் சந்தை
ADDED : செப் 22, 2025 03:11 AM

காசிமேடு: மஹாளய அமாவாசையால் காசிமேடு மீன்பிடித்துறைமுக சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னையில் மீன் சந்தைகளில் மிகவும் பிரபலமான காசிமேடு மீன் சந்தை, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் வரத்தால் திருவிழா கூட்டம் போல களைகட்டும்.
மீன் விற்பனையும் அதிகாலை முதல் அமோகமாக இருக்கும். ஆனால், ஞாயிற்றுகிழமை என்றாலும், புரட்டாசி மாத மகாளய அமாவாசையால், பொதுமக்கள் மீன்கள் வாங்க ஆர்வம் நேற்று காட்டவில்லை. அதேபோல 50க்கும் உட்பட்ட விசைப்படகுகளே கரை திரும்பின. மீன் வரத்து குறைவாக இருந்ததால், மீன் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
இதனால், காசிமேடு மீன் சந்தை வெறிச்சோடி களையிழந்து காணப்பட்டது.
மீன் விலை நிலவரம் வகை கிலோ (ரூ.) வஞ்சிரம் 900 - 1,000 கறுப்பு வவ்வால் 600 - 700 வெள்ளை வவ்வால் 900 - 1,000 ஐ வவ்வால் 1,200 - 1,300 பாறை 600 - 700 கடல் விரால் 400 - 500 சங்கரா 400 - 500 தும்பிலி 150 - 200 கனாங்கத்த 150 - 200 கடம்பா 200 - 250 நெத்திலி 200 - 300 வாளை 50 - 70 இறால் 400 - 500 டைகர் இறால் 1,000 - 1,100 நண்டு 200 - 300