/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவர் கபடியில் காவேரி பள்ளி சாம்பியன்
/
சிறுவர் கபடியில் காவேரி பள்ளி சாம்பியன்
ADDED : நவ 17, 2024 10:26 PM

சென்னை:சென்னையில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டியில், சாலிகிராமம் காவேரி பள்ளி அணி, திரில் வெற்றியுடன், சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளி சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட, பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி, பள்ளி மைதானத்தில் நடந்தது. போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, 25 பள்ளி அணிகள் மோதின.
போட்டிகள், 'நாக் அவுட்' முறையில் நடந்தன. இதில், துவக்கம் முதலே அதிரடியாக ஆடி, அடுத்தடுத்த வெற்றிகளைப்பெற்ற காவேரி மற்றும் நெல்லை நாடார் பள்ளி அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.
விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், காவேரி பள்ளி அணி வீரர்கள், தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்த, எதிரணியினர் தடுப்பு ஆட்டத்தில் தீவிரம் காட்டினர். இதனால், ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை பரபரப்பு நிலவியது.
இறுதியில், காவேரி பள்ளி அணியினர் 31- - 28 என்ற புள்ளிகள் கணக்கில்ல, திரில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றனர். ராயபுரம் சங்கரலிங்க நாடார், அசோக் நகர் வேளாங்கண்ணி பள்ளி அணிகள் முறையே மூன்று, நான்காம் இடங்களை பிடித்தன.