/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
25 கிலோ கஞ்சா சிக்கியது கேரள வாலிபர்கள் கைது
/
25 கிலோ கஞ்சா சிக்கியது கேரள வாலிபர்கள் கைது
ADDED : டிச 07, 2024 12:36 AM

அம்பத்துார், அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. இதையடுத்து, பேருந்து நிலையத்தில் போலீசார் நேற்று மதியம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு, இரண்டு வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில், இரண்டு பெரிய மூட்டைகளுடன் நின்றிருந்தனர். போலீசார் அந்த மூட்டைகளை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரிந்தது. இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த, சுராஜ், 21, ஷாம்நாத், 20, என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து, அம்பத்துார் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், 2.50 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.