/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கிக் பாக்சிங் ப்ரீமியர் லீக்' சென்னையில் துவக்கம்
/
'கிக் பாக்சிங் ப்ரீமியர் லீக்' சென்னையில் துவக்கம்
'கிக் பாக்சிங் ப்ரீமியர் லீக்' சென்னையில் துவக்கம்
'கிக் பாக்சிங் ப்ரீமியர் லீக்' சென்னையில் துவக்கம்
ADDED : அக் 25, 2025 04:33 AM
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக, கிக் பாக்சிங் ப்ரீமியர் லீக் போட்டி, சென்னையில் நேற்று துவங்கியுள்ளது. மூன்று நாட்கள் நடக்கும் இப்போட்டியில் 60 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கம் மற்றும் ஸ்போர்டோராமா இணைந்து, மாநில அளவில் 'கிக் பாக்சிங் ப்ரீமியர் லீக்' போட்டியின் முதல் சீசனை, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள குத்துச்சண்டை அரங்கில், நேற்று துவங்கின; மூன்று நாட்கள் போட்டியை நடத்துகின்றன.
சென்னை, கோவை, சேலம் உட்பட ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு அணியிலும் 12 பேர் வீதம், மொத்தம் 60 வீரர் - வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். போட்டி 12 சுற்று களாக நடக்கிறது .
தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களான ரக்சித்ரா, அஸ்வின் சுரேஷ், ராகுல், ஜெய் சீனிவாசன் ஆகியோர், களம் இறங்கியுள்ளனர்.
தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கத்தின் செயலர் சுரேஷ் கூறியதாவது:
தமிழகத்தில் முதல் முறையாக, கிக் பாக்சிங் ப்ரீமியர் லீக் போட்டி, சென்னையில் நடப்பதில் மகிழ்ச்சி. கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில், தமிழக வீரர்கள் பங்கேற்று, சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
கடந்த 2022ல், அனைத்து போட்டிகளிலும் கடைசி இரு இடங்களில் இருந்த தமிழக அணி, இந்தாண்டு நடந்த தேசிய போட்டியில் 'ஓவர்ஆல்' சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, இத்தகைய லீக் போட்டிகளை நடத்தி வருகிறோம். இதன் மூலம் சிறந்த வீரர்கள் கண்டறியப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

