/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 நாய்கள் துரத்தி கடித்ததில் 70 வயது மூதாட்டி படுகாயம்
/
4 நாய்கள் துரத்தி கடித்ததில் 70 வயது மூதாட்டி படுகாயம்
4 நாய்கள் துரத்தி கடித்ததில் 70 வயது மூதாட்டி படுகாயம்
4 நாய்கள் துரத்தி கடித்ததில் 70 வயது மூதாட்டி படுகாயம்
ADDED : அக் 25, 2025 04:33 AM
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டையில் நான்கு தெருநாய்கள் சேர்ந்து துரத்தி கடித்ததில், கீழே விழுந்த மூதாட்டிக்கு இடுப்பு எலும்பு முறிந்துள்ளது. இச்சம்பவம், அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை, அனைத்து தெருக்களில் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவு வேளைகளில் தெருக்களில் வலம் வரும் நாய்களால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த மூதாட்டி பாலசவுந்தர்யா, 70 என்பவர், நேற்று வீட்டின் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, சாலையில் நின்ற நான்கு தெரு நாய்கள், அவரை திடீரென பாய்ந்து கடிக்க துரத்தியது.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டியை, நாய்களிடம் இருந்து அங்கிருந்தோர் மீட்டனர். பலத்த காயமடைந்த அவரை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்களின் பரிசோதனையில், அவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

