/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெளிநாட்டு வேலை என வசூலித்து ஏமாற்றியவர் கடத்தல்: 3 பேர் கைது
/
வெளிநாட்டு வேலை என வசூலித்து ஏமாற்றியவர் கடத்தல்: 3 பேர் கைது
வெளிநாட்டு வேலை என வசூலித்து ஏமாற்றியவர் கடத்தல்: 3 பேர் கைது
வெளிநாட்டு வேலை என வசூலித்து ஏமாற்றியவர் கடத்தல்: 3 பேர் கைது
ADDED : ஏப் 26, 2025 12:19 AM

சென்னை, திருப்பத்துாரைச் சேர்ந்தவர் மணி, 33. அவர், புதுக்கோட்டையைச் சேர்ந்த டோமனிக், 34, விஜயகுமார், 43, பவுல்ராஜ், 26 ஆகிய மூவரிடம் தலா, 5 லட்சம் வரை பணத்தை வாங்கிவிட்டு, வெளிநாட்டிற்கு அனுப்பாமலும், பணத்தை தராமலும் ஏமாற்றி உள்ளார்.
இவர் வெளியூருக்கு தப்ப கோயம்பேடு பஸ் நிலையம் சென்றபோது, பாதிக்கப்பட்ட மூவரும், காரில் விரைந்து வந்து, மணியை தாக்கி, காரில் கடத்தினர்.
மறைமலைநகர் பகுதியில் சென்றபோது, மணியின் மனைவி மொபைல்போனில் கணவரை தொடர்பு கொண்டபோது, கடத்தப்பட்டது தெரியவந்தது. கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பின் போலீஸ் அதிகாரி அறிவுறுத்தலின்படி, நேற்று பணம் கொடுப்பது போல கடத்தலில் ஈடுபட்டவர்களை கோயம்பேடு பகுதிக்கு வரவழைத்த போலீசார், சுற்று வளைத்து கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு உபயோகித்த காரை பறிமுதல் செய்தனர்.
மோசடி செய்தவர் கைது
நாமக்கல், மோகனுார் தாலுகாவைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன், 34, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். புகாரில், 'தனக்கும், தன்னை சார்ந்த சிலருக்கும், அரசு வேலை வாங்கி தருவதாக, சென்னையைச் சேர்ந்த கந்தசாமி, 51 என்பவர் உறுதி அளித்து இருந்தார். இதை உண்மை என நினைத்து, 42.49 லட்சம் ரூபாயை கொத்தேன். வேலை வாங்கித் தரவில்லை; பணத்தையும் திருப்பித் தரவில்லை' என, புகார் அளித்திருந்தார்.
வேலை வாய்ப்பு மோசடி பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கந்தசாமி, 51 என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
**

