/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
13 ஆண்டாக 'டிமிக்கி' கொடுத்த கில்லாடி ரூ.2 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைது
/
13 ஆண்டாக 'டிமிக்கி' கொடுத்த கில்லாடி ரூ.2 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைது
13 ஆண்டாக 'டிமிக்கி' கொடுத்த கில்லாடி ரூ.2 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைது
13 ஆண்டாக 'டிமிக்கி' கொடுத்த கில்லாடி ரூ.2 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைது
ADDED : செப் 04, 2025 02:46 AM

சென்னை போலி ஆவணம் வாயிலாக, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில், 13 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு, அதே பகுதியில், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு, சென்னை, போரூர், மதனந்தபுரத்தைச் சேர்ந்த ஏ.பி.சுரேஷ்குமார் என்பவர் சொந்தம் கொண்டாடினார்.
இதுகுறித்து, 2012ல், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சேகர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, போலி ஆவணங்கள் வாயிலாக, சுரேஷ்குமார் நிலத்தை அபகரித்தது தெரியவந்தது.
ஆனால், அவர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று விசாரித்த போது, அங்கு தனசூர்யா என்பவர் தங்கி இருப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதனால், போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது.
தொடர் விசாரணையில், சுரேஷ்குமார் என்பவர் தான், தனசூர்யா என்ற பெயரில் அங்கு வசித்து வந்ததையும், நில மோசடி, வங்கி கடன் மோசடிகளில் ஈடுபட்டு வருவதையும் போலீசார் உறுதி செய்தனர். நில மோசடி தொடர்பாக, இவர் மீது, 10 வழக்குகளும், வங்கி கடன் மோசடி தொடர்பாக, 15 வழக்குகளும் பதிவாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
நில மோசடி தொடர்பான வழக்கு ஒன்றில் கைதாகி, 2019ல் ஜாமினில் வெளியே வந்த சுரேஷ்குமார், அதன்பின் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நில அபகரிப்பு வழக்கில், 13 ஆண்டுகளுக்கு பின், சுரேஷ்குமாரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
*