/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகிழ்ச்சி துள்ளலுடன் மழலையர் பங்கேற்பில் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்
/
மகிழ்ச்சி துள்ளலுடன் மழலையர் பங்கேற்பில் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்
மகிழ்ச்சி துள்ளலுடன் மழலையர் பங்கேற்பில் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்
மகிழ்ச்சி துள்ளலுடன் மழலையர் பங்கேற்பில் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்
UPDATED : அக் 03, 2025 01:14 AM
ADDED : அக் 03, 2025 12:12 AM

சென்னை:பெற் ற ோருடன் 1,500க்கும் மேற்பட்ட மழலையர் பங்கேற்பில், 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் வேலம்மாள், 'நியூ ஜென் கிட்ஸ்' சார்பில், 'அரிச்சுவடி ஆரம்பம்' என்ற 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி, விஜயதசமி நன்னாளான நேற்று இனிதே நடந்தது.
குழந்தைகளின் கல்வி கண் திறக்கும் நிகழ்ச்சியை, 'வித்யாரம்பம்' என்பர். இதை, சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமி நன்னாளில் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று, நம் நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் வேலம்மாள், 'நியூ ஜென் கிட்ஸ்' சார்பில், ஐந்து இடங்களில் பல்துறை வல்லுநர்கள், நெல் மணிகள் நிரம்பிய தாம்பூலத்தில், 2.5 முதல் 3.5 வயதுடைய குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து, 'அ'னா, 'ஆ'வன்னா எனும் அகரத்தை எழுதி, அரிச்சுவடியை ஆரம்பித்து வைத்தனர்.
அந்த வகையில், நேற்று காலை 9:00 முதல் பகல் 12:00 மணி வரை, படப்பை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி, வடபழனி முருகன் கோவில், கேளம்பாக்கம் வேலம்மாள் நியூ ஜென் பள்ளி, தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூரப்பேட்டை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றன.
இவற்றில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும், வித்யாரம்பம் செய்தபோது எடுத்த புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ், தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள 'டி - ஷர்ட், லேர்னிங் கிட்' ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. இதை பெற்ற மழலையரின் முகங்கள், வண்ண மலர்களாய் ஜொலித்தன.