/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் கிஷோர்குமாருக்கு வெண்கலம்
/
ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் கிஷோர்குமாருக்கு வெண்கலம்
ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் கிஷோர்குமாருக்கு வெண்கலம்
ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் கிஷோர்குமாருக்கு வெண்கலம்
ADDED : ஆக 26, 2025 12:24 AM

சென்னை, இந்தோனேசியாவில் நடந்த, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய அலைச்சறுக்கு போட்டியில், சென்னையின் கிஷோர் குமார், வெண்கல பதக்கம் வென்றார்.
ஆசிய சர்பிங் கூட்டமைப்பு மற்றும் ஏர் ஆசிய குழுமம் சார்பில், 'டிபி ஜாப்ரிக்ஸ் குரோம் பேட்ரோல் சர்பிங் சாம்பியன்ஷிப் - 2025' எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டு போட்டி, இந்தோனேஷியாவில் உள்ள பாலியின் குடா கடற்கரையில் நடந்தது.
இதில், 12 முதல் 18 வயது வரையிலான பல்வேறு பிரிவு போட்டிகளில், ஆசிய கண்டத்தில் உள்ள, 19 நாடுகளை சேர்ந்த, 150 இளம் வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில், நான்கு வீரர்கள் போட்டியிட்டனர். இறுதிப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில், 18 வயது பிரிவில் போட்டியிட்ட சென்னையின் கிஷோர் குமார், மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்று அசத்தினார்.
கி ேஷார்குமார் கூறுகையில்,''ஆசியாவின் சிறந்த இளம் சர்பிங் வீரர்களுக்கு எதிராக போட்டியிடுவது, ஒரு நம்பமுடியாத அனுபவமாக இருந்தது. வெற்றி பெற்று மேடையில் பதக்கம் வாங்கியது, இந்தியாவை உயர்ந்த இடத்தில் பிரதிபலிப்பதுடன், எனக்கு நம்பிக்கையையும் உந்துதலையும் அளிக்கிறது,'' என்றார்.
***