/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பா.ஜ., பிரமுகரை தாக்கிய பெண்
/
கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பா.ஜ., பிரமுகரை தாக்கிய பெண்
கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பா.ஜ., பிரமுகரை தாக்கிய பெண்
கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பா.ஜ., பிரமுகரை தாக்கிய பெண்
ADDED : ஆக 26, 2025 12:24 AM
விருகம்பாக்கம், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு, நள்ளிரவில் வீட்டு கதவை தட்டிய பா.ஜ., பிரமுகரின் கழுத்தில், கத்தியால் வெட்டிய பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மடிப்பாக்கம், அந்தோணி தெருவைச் சேர்ந்தவர் சுரேந்தர், 51; பா.ஜ., கிழக்கு மாவட்ட துணைத் தலைவர். இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர், சாலிகிராமத்தைச் சேர்ந்த திருமணமான, 43 வயது உறவுக்கார பெண்ணுடன், கடந்த ஆறு மாதங்களாக பழகி வந்துள்ளார். கடந்த வாரம், அப்பெண் சொந்த ஊர் செல்ல, 'டிராலி பேக்' கேட்டதால், நண்பரிடம் வாங்கி சுரேந்தர் கொடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, லோன் கட்ட 5,000 ரூபாய் வேண்டும் என, அப்பெண் கேட்க, 'ஜிபே' பணப்பரிமாற்ற செயலி வாயிலாக, சுரேந்தர் பணத்தை அனுப்பி வைத்தார்.
பின், இரவு 10:30 மணியளவில், இருவரும் மொபைல் போனில் பேசியுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பெண் கோபமாக இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பின் சுரேந்தர் தொடர்பு கொண்டும், அப்பெண் அழைப்பை எடுக்கவில்லை.
இதையடுத்து, மடிப்பாக்கத்தில் இருந்து பைக்கில் சாலிகிராமம் வந்த சுரேந்தர், மீண்டும் அப்பெண்ணை மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்பெண் போனை எடுக்காததால், வீட்டின் கதவை தட்டியுள்ளார்.
அப்போது, அப்பெண்ணின் கணவர் வந்து கதவை திறந்துள்ளார். அப்போது சுரேந்தர், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். நள்ளிரவில் வந்து கதவை தட்டியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, அங்கு வந்த அப்பெண், கையில் இருந்த கத்தியால் சுரேந்தரின் கழுத்தில் வெட்டியுள்ளார். காயமடைந்த சுரேந்தர், மடிப்பாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்று, அங்கிருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கழுத்தில், 31 தையல்கள் போடப்பட்டுள்ளன. விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.