sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோடம்பாக்கம் மண்டலம் --- கால்வாயில் கழிவுநீர் விடுவதை தடுத்து நிறுத்தி இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோடம்பாக்கம் மண்டல கவுன்சிலர்கள்

/

கோடம்பாக்கம் மண்டலம் --- கால்வாயில் கழிவுநீர் விடுவதை தடுத்து நிறுத்தி இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோடம்பாக்கம் மண்டல கவுன்சிலர்கள்

கோடம்பாக்கம் மண்டலம் --- கால்வாயில் கழிவுநீர் விடுவதை தடுத்து நிறுத்தி இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோடம்பாக்கம் மண்டல கவுன்சிலர்கள்

கோடம்பாக்கம் மண்டலம் --- கால்வாயில் கழிவுநீர் விடுவதை தடுத்து நிறுத்தி இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோடம்பாக்கம் மண்டல கவுன்சிலர்கள்


ADDED : ஆக 14, 2025 11:44 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடம்பாக்கம், 'கால்வாய்களில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், கால்வாயில் கழிவுநீர் விடுவதை தடுத்து நிறுத்தி, பாதாள சாக்கடை இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோடம்பாக்கம் மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

கோடம்பாக்கம் மண்டல குழு கூட்டம், அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மண்டல அலுவலகத்தில் நடந்தது.

இதில், விருகம்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகரராஜா, மண்டல உதவி கமிஷனர் முருகேசன், செயற்பொறியாளர்கள் இனியன், ரங்கநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கவுன்சிலர்கள் பேசியதாவது:

வார்டு - 139, ம.தி.மு.க., சுப்பிரமணி: கடந்த ஐந்து மாதங்களாக, மண்டல குழு கூட்ட பொருளில், என் வார்டில் மேற்கொள்ள வேண்டிய எந்த பணியும் வரவில்லை. பிற வார்டுகள் பணிகள் குறித்து பொருள் இருக்கும்போது, என் வார்டு மட்டும் இருப்பதில்லை. என் வார்டு ஓரம்கட்டப்படுகிறதா?

கணக்குநிலை குழு தலைவர் தனசேகர்: வார்டில் பணிகளை உருவாக்குவது, வார்டில் உள்ள உதவி செயற்பொறியாளர் பணி.

இதற்கு பதில் அளித்த அதிகாரிகள்: 139வது வார்டில் பல்வேறு பணிகள் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் விடும் நிலையில் உள்ளது.

வார்டு - 133, தி.மு.க., ஏழுமலை: கடந்த ஆண்டு மழைக்காலத்தில், அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றினர். இந்த ஆண்டும் மழைக்காலம் வரும் முன், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பல பணிகளுக்கு ரிப்பன் மாளிகையில் ஒப்பந்தம் விடப்படுகிறது. அவர்கள், இங்குள்ள அதிகாரிகளுக்கும் முறையான தகவல் தெரிவிக்காமல், பணிகள் செய்கின்றனர்.

இதனால், பல இடையூறுகள் ஏற்படுகின்றன. நடைபாதையோரம் கற்கள் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. ஆனால், சீராக உள்ள நடைபாதையையும் உடைந்து கற்கள் பதிக்கப்படுகிறது.

வார்டு - 134, பா.ஜ., உமா ஆனந்தன்: என் வார்டில் முறையான அனுமதி மற்றும் அறிவிப்பு இன்றி, சிறப்பு பணிகள் சார்பில் சாலையில் பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. ஆனால், முறையாக சாலையை சீர் செய்வதில்லை. காமகோடி சாலையில் மின் வாரியம் சார்பில் பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பணி முடிந்தும், சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை.

மாநகராட்சியிடம் முறையான அனுதி பெறாமல், விடுதிகள் அதிகரித்து வருகின்றன. அவற்றை முறைப்படுத்த வேண்டும்.

வார்டு - 138, தி.மு.க., கண்ணன்: எம்.ஜி.ஆர்., நகர் கால்வாயில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது. இதில், எம்.ஜி.ஆர்., நகர் பச்சையப்பன் தெருவில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் விடப்படுகிறது. இதனால், கால்வாயில் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் பாதிக்கப்படுகின்றன. அவர்களுக்கு குடிநீர் வாரியம் சார்பில் 'நோட்டீஸ்' வழங்கி, பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும்.

வார்டு - 137, தி.மு.க., தனசேகர்: சென்னை மாநகராட்சியில் உள்ள சுவர்களில், விளம்பர ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. போஸ்டர் ஒட்டினால் அதை கிழித்து விடலாம்.

வீட்டு உரிமையாளர், தன் வீட்டின் சுற்றுச்சுவரில் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டினாலும் மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும்.

அனுமதி பெறாதவர்களுக்கு, விளம்பர பலகை சட்டத்தில் அபராதம் விதிக்க வேண்டும். எனவே, மண்டலத்தில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வார்டு - 129, தி.மு.க., ரவி சங்கர்: என் வார்டில் 15 சாலைகளை சீரமைக்க பட்டியல் அளித்துள்ளேன். அவற்றை, மழைக்கு முன் சீரமைக்க வேண்டும். ஒன்பது சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. அவற்றை பராமரிக்க, ஒரே ஒரு ஆள் நியமிக்கப்பட்டுள்ளார். பல கி.மீ., துாரத்தில் உள்ள ஒன்பது பூங்காக்களை ஒருவர் எப்படி பராமரிப்பார். அதேபோல், மழைநீர் வடிகால்களை விரைந்து துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்டல குழு தலைவர் முருகேசன்: பூங்கா பராமரிப்பல் குறிப்பிட்ட சதுர அடிக்கு ஒரு பணியாளர் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஒன்பது பூங்கா, அந்த சதுர அடிக்குள் வருவதால் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மழைநீர் வடிகால்வாயை துார்வார, ஒரு மண்டலத்தில் ஒரு நவீன இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தவிர, 95 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வார்டு - 130, தி.மு.க., பாஸ்கர்: வடபழனி 100 அடி சாலை மேம்பாலத்தின் கீழ், ஓராண்டிற்கு முன் குடிநீர் குழாய் சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இன்னும் குடிநீர் கசிந்து சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளன. எனவே, அதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வார்டு - 128, தி.மு.க., ரத்னா லோகேஸ்வரன்: விருகம்பாக்கத்தில் தார் சாலை அமைக்கும்போது, மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், அவர்களுடன் கலந்தாலோசித்து சாலை அமைக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் சாலை அமைக்கும்போது, அதே இடத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் போக்குவரத்து திருப்பி விடுகிறது. இதனால், சாலை முறையாக அமைக்க முடியாத நிலை உள்ளது.

வார்டு - 136, தி.மு.க., நிலவரசி துரைராஜ்: விருகம்பாக்கம் ஏ.வி.எம்., பகுதியில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் மெத்தை, சோபா உள்ளிட்ட பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.






      Dinamalar
      Follow us