UPDATED : ஜூன் 07, 2026 11:44 PM
ADDED : ஜூன் 07, 2026 11:43 PM
குன்றத்துார்: நிலம் தொடர்பான பிரச்னையில், வி.ஏ.ஓ.வை தாக்கிய, கோவூர் வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
குன்றத்துாரை அடுத்த கோவூரைச் சேர்ந்தவர்கள் மோகன்ராஜ், 35, சதாசிவம், 30. இவர்கள், அதே பகுதியில் உள்ள ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துள்ளனர்.
இவர்கள் பயன்படுத்தி வந்த நிலம் தொடர்பாக, வேறு ஒருவரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த மோகன்ராஜ் மற்றும் சதாசிவம், கோவூர் வி.ஏ.ஓ., செல்வகுமாரை நேற்று முன்தினம் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, வி.ஏ.ஓ.,வை இருவரும் தாக்கியதாக கூறப்படுகிறது.
வி.ஏ.ஓ., புகாரின்படி, மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகன்ராஜ் மற்றும் சதாசிவம் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
