தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நள்ளிரவில் தொடர் மின் தடை: சாலைக்கு வந்து போராடிய மக்கள்

நள்ளிரவில் தொடர் மின் தடை: சாலைக்கு வந்து போராடிய மக்கள்

நள்ளிரவில் தொடர் மின் தடை: சாலைக்கு வந்து போராடிய மக்கள்


UPDATED : ஜூன் 07, 2026 11:41 PM

ADDED : ஜூன் 07, 2026 11:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 11:41 PM ADDED : ஜூன் 07, 2026 11:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கானத்துார்: தொடர் மின் தடையை கண்டித்து, முட்டுக்காடு பகுதியில் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கானத்துார், கரிகாட்டுக்குப்பம், முட்டுக்காடு பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதை கண்டித்து, பகுதிமக்கள் ஏற்கனவே மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தும் போதிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 7:30 மணியளவில் ஏற்பட்ட மின் தடை, நள்ளிரவு வரை நீடித்தது. ஆத்திரமடைந்த பகுதி மக்கள், இ.சி.ஆர்., எனும் கிழக்குக் கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கானத்துார் போலீசார் பேச்சு நடத்தியதையடுத்து, நள்ளிரவு 12:30 மணியளவில் மின் வினியோகம் சீரானது.

இந்நிலையில், அங்கு வந்திருந்த திருப்போரூர் எம்.எல்.ஏ., விஜயராஜ், மின் தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்களிடம் விளக்கமளித்துக் கொண்டிருந்தார். அப்போது, மீண்டும் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை சமாதானப்படுத்திய எம்.எல்.ஏ., முட்டுக்காடு பகுதியில் துணை மின்நிலையம் அமைத்து, ஓரிரு மாதங்களில் மின் தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்; இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையில், பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள 23,000க்கும் மேற்பட்ட வீடுகளிலும், நேற்று முன்தினம் நள்ளிரவில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொள்ள முடியாததால், முதியோர், குழந்தைகள் உள்ளிட்டோர் அதிகாலை வரை கடும் அவதிக்குள்ளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us