/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு அணுகு சாலையை 'பார்க்கிங்'காக மாற்றி அடாவடி
/
கோயம்பேடு அணுகு சாலையை 'பார்க்கிங்'காக மாற்றி அடாவடி
கோயம்பேடு அணுகு சாலையை 'பார்க்கிங்'காக மாற்றி அடாவடி
கோயம்பேடு அணுகு சாலையை 'பார்க்கிங்'காக மாற்றி அடாவடி
ADDED : செப் 30, 2025 02:05 AM

கோயம்பேடு,
கோயம்பேடு மேம்பாலத்தை ஒட்டி இரண்டு கோடி ரூபாய் செலவில் அமைக் கப்பட்ட அணுகு சாலையை ஆக்கிரமித்து, தனியார் வாகனங்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே, மாநில தேர்தல் கமிஷன் அலுவலகம், ஜெய் நகர் பூங்கா, மின் வாரிய அலுவலகம் ஆகியவை உள்ளன.
இப்பகுதி மேம்பாலத்தை ஒட்டியுள்ள 100 அடி சாலையோரத்தில் பிளாஸ்டிக், உணவு மற்றும் கட்டடக் கழிவுகள் மலை போல் குவிக்கப்பட்டதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, குப்பை அகற்றப்பட்டது.
மேலும், நெடுஞ்சாலைத் துறை சார்பில், 2024ல், இரண்டு கோடி ரூபாய் செலவில், 250 மீட்டர் அணுகு சாலை, நடைபாதை மற்றும் மின் விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டன.
ஜெய் நகர் பூங்கா, மின் வாரிய அலுவலகம் செல்லவும், 100 அடி சாலையில் வாகன நெரிசல் ஏற்படும் போது, இருசக்கர வாகனம், ஆட்டோ, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லவும், இந்த சாலை பயன்படுகிறது.
மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட அணுகு சாலையை ஆக்கிரமித்து, தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, 'பார்க்கிங்' பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
அணுகு சாலையின் இருபுறமும், கார்கள், லாரிகள், வேன்கள் நிறுத்தப் பட்டுள்ளன.
இதன் மறைவில், இரவு நேரத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
அணுகு சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை, போக்குவரத்து போலீசார் உடனடியாக அகற்ற வேண்டும்.
இதுபோல் ஆக்கிரமிப்பை தடுக்க, இப்பகுதியில் கட்டண வாகன நிறுத்துமிடமாக மாற்ற வேண்டும்.
அவ்வாறு மாற் றினால், கோயம்பேடு பேருந்து நிலையம், தேர்தல் அலுவலகம், ஜெய் நகர் பூங்காவிற்கு வருவோர், தங்கள் வாகனங்களை இங்கு நிறுத்த வசதியாக இருக்கும்; மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.