/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு மேம்பால ரவுண்டானா கட்டட கழிவு கிடங்கான அவலம்
/
கோயம்பேடு மேம்பால ரவுண்டானா கட்டட கழிவு கிடங்கான அவலம்
கோயம்பேடு மேம்பால ரவுண்டானா கட்டட கழிவு கிடங்கான அவலம்
கோயம்பேடு மேம்பால ரவுண்டானா கட்டட கழிவு கிடங்கான அவலம்
ADDED : ஜன 03, 2024 12:27 AM

கோயம்பேடு, கோயம்பேடு மேம்பால ரவுண்டானாவின் கீழ்ப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள கட்டட கழிவுகளை அகற்றி, அப்பகுதியை அழகுபடுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, கோயம்பேடு மேம்பால ரவுண்டானாவின் கீழே, கட்டட கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, ரவுண்டானாவின் கீழ் உள்ள, 40,000 சதுர அடி நிலத்தில், பூங்கா அமைக்கப்பட்டது.
ஆனால் அதே மேம்பாலத்தில், தே.மு.தி.க., அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவின் கீழே, கட்டட கழிவுகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன.
வடிகால் மூடிகள், 'ரெடிமேட் சிமென்ட்' கால்வாய்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்தும் நம் நாளிதழில் செய்தி வெளியானதால், அங்கு குவிக்கப்பட்ட குப்பை அகற்றப்பட்டது.
தற்போது மீண்டும், மேம்பால ரவுண்டானாவின் கீழ்ப்பகுதியில், கட்டட கழிவுகள் குவிக்கப்பட்டு உள்ளன.
எனவே, இந்த குப்பை மற்றும் கட்டட கழிவுகளை அகற்றிவிட்டு, அப்பகுதியை அழகுபடுத்த மாநகராட்சி முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.