/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இட நெருக்கடியில் சிரமப்படும் குமரன் நகர் காவல் நிலையம்
/
இட நெருக்கடியில் சிரமப்படும் குமரன் நகர் காவல் நிலையம்
இட நெருக்கடியில் சிரமப்படும் குமரன் நகர் காவல் நிலையம்
இட நெருக்கடியில் சிரமப்படும் குமரன் நகர் காவல் நிலையம்
ADDED : ஜூலை 07, 2025 03:58 AM

குமரன் நகர்:பாழடைந்த வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் குமரன் நகர் காவல் நிலையத்திற்கு, புதிய கட்டடம் தேவை என, போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜாபர்கான்பேட்டை, குமரன் நகர் ராகவன் காலனியில், குமரன் நகர் காவல் நிலையம் உள்ளது. சைதாப்பேட்டை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட இந்த காவல் நிலையத்தில், தரை தளத்தில் குற்றப்பிரிவும், மேல் தளத்தில் சட்டம் - ஒழுங்கு பிரிவும் செயல்படுகின்றன.
போதிய இட வசதியில்லாத, வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நிலையில், புகாரளிக்க வருவோர் காத்திருக்க கூட வசதியில்லை.
இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, புகார் அளிப்போரின் வசதிக்காக, காவல் நிலையம் வளாகத்தில் தகர ஷீட்டால் வரவேற்பு அறை அமைக்கப்பட்டது.
இந்த காவல் நிலையம், சாலை மட்டத்தைவிட பள்ளமாக இருப்பதால், மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, பாழடைந்த காவல் நிலையத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட காவல் துறை வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'அசோக் நகர் 10வது அவென்யூவில், குமரன் நகர் காவல் நிலையம் கட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன் இடம் பார்க்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் நிலைய கட்டுமான பணி இன்னும் துவங்கப்படவில்லை' என்றனர்.