/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முத்துக்குமார சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
/
முத்துக்குமார சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
முத்துக்குமார சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
முத்துக்குமார சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 15, 2025 11:18 AM

பிராட்வே: கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிேஷகம், நாளை கோலாகலமாக நடக்க உள்ளது. விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த 10ம் தேதி கோலவிக்னேஷ்வர பூஜை, கணபதி ேஹாமத்துடன் கோலாகலமாக துவங்கியது.
விழாவில், இன்று நான்காம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, ஐந்தாம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்க உள்ளன. கும்பாபிேஷக விழா, நாளை வெகுவிமரிசையாக நடக்க உள்ளது.
விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், பாதுகாப்பு மற்றும் சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து, ஸ்ரீமுத்துக்குமார சுவாமி கோவில் முதன்மை அறங்காவலரும், கல்வி செயலாண்மை தலைவருமான ஏ.பி.அசோக்குமார் கூறியதாவது:
கும்பாபிஷேக விழாவையொட்டி, ராஜகோபுரம் உட்பட ஆறு கோபுரங்களிலும் பஞ்ச வர்ணமும்; கர்ப்ப கிரகத்தில் நவீன வெள்ளி வேலைப்பாடுகளும், விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளன.
மூலவர் கந்தசாமி, உற்சவர் முத்துக்குமார சுவாமி கோவில் ஸ்தலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி சேவையாற்றும் ஸ்ரீமுத்துக்குமார சுவாமி தேவஸ்தானம் கல்வி செயலாண்மை கீழ், கொடுங்கையூர் முத்துகுமார சுவாமி கல்லுாரி, புரசைவாக்கத்தில் ஆரம்ப, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் மற்றும் பூங்கா நகர் பகுதியில் தொடக்கப்பள்ளி உள்ளிட்டவை செயல்படுகின்றன.
இதில், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
கோவில் திருப்பணிகளை, தமிழ்நாடு பேரி செட்டியார்கள் சமூகம் சார்பில் உபயதாரர்கள் உதவியுடன் கும்பாபிேஷக திருப்பணி நடக்கிறது. கும்பாபிேஷக பணிகளை அறங்காவலர்கள் கே.நந்தக்குமார், ஏ.என்.சுரேஷ்குமார், கல்வி செயலாண்மை செயலர் லஷ்சுமணசாமி உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.