ADDED : ஜன 06, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், கடந்த மாதம் 13ம் தேதி, ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள, கிடங்கில் திடீர் சோதனையிட்டனர். அதில், 2.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 கிலோ குட்கா பொருட்கள் சிக்கின.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதே பகுதி காமராஜ் நகரை சேர்ந்த குட்கா வியாபாரி சோமசுந்தர கணேஷ், 53, என்பவரை கைது செய்தனர்.
இந்த நிலையில், அரசு உத்தரவை மீறி தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபட்ட அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று, அந்த உத்தரவை ஆவடி போலீசார் செயல்படுத்தினர்.