/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சீமான் கட்சி நிர்வாகிக்கு 'குண்டாஸ்'
/
சீமான் கட்சி நிர்வாகிக்கு 'குண்டாஸ்'
ADDED : பிப் 20, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை உத்தண்டியைச் சேர்ந்தவர் சக்திவேல், 42; நாம் தமிழர் கட்சி நிர்வாகியான இவர், கிண்டியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு பணிபுரிந்த, 25 வயதான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக, கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவரது மொபைல் போனில், 30க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோக்கள் உள்ளன. அவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்படி, சக்திவேல் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.