/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.90 லட்சம் தங்கம் கடத்திய 'குருவி' ஏர்போர்ட்டில் கைது
/
ரூ.90 லட்சம் தங்கம் கடத்திய 'குருவி' ஏர்போர்ட்டில் கைது
ரூ.90 லட்சம் தங்கம் கடத்திய 'குருவி' ஏர்போர்ட்டில் கைது
ரூ.90 லட்சம் தங்கம் கடத்திய 'குருவி' ஏர்போர்ட்டில் கைது
ADDED : அக் 27, 2024 12:12 AM

சென்னை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து வரும் விமானத்தில், கடந்த 24ம் தேதி தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து சோதனையை தீவிரப்படுத்தினர்.
குறிப்பிட்ட விமானத்தில் வந்துவிட்டு, இலங்கைக்கு மற்றொரு விமானத்தில் செல்ல இருந்த இலங்கையைச் சேர்ந்த 35 வயது ஆண் பயணி ஒருவர், மீது சந்தேகம் வலுத்தது.
அவரை ரகசியமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அவர், டிரான்சிட் பயணியருக்கான கழிப்பறைக்கு சென்று விட்டு, நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்தார்.
சுங்க அதிகாரிகள் அந்த கழிப்பறைக்குள் சென்று பார்த்தனர். அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள், ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் கட்டப்பட்ட பார்சல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை, பிரித்துப் பார்த்தபோது, பேஸ்ட் வடிவிலான 1.24 கிலோ தங்கம் சிக்கியது. அதன் சர்வதேச மதிப்பு 90 லட்சம் ரூபாய்.
தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், இலங்கை பயணியை அழைத்து விசாரித்தனர். இதில், கடத்தல் கும்பலிடம் கூலிக்காக வேலை செய்யும் 'குருவி' என உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.