/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழிலாளர் ஆணையர் அலுவலகம் 10ல் அண்ணாநகருக்கு இடமாற்றம்
/
தொழிலாளர் ஆணையர் அலுவலகம் 10ல் அண்ணாநகருக்கு இடமாற்றம்
தொழிலாளர் ஆணையர் அலுவலகம் 10ல் அண்ணாநகருக்கு இடமாற்றம்
தொழிலாளர் ஆணையர் அலுவலகம் 10ல் அண்ணாநகருக்கு இடமாற்றம்
ADDED : நவ 07, 2025 12:19 AM
சென்னை: தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், அதன் சார்பு அலுவலகங்கள், வரும் 10ம் தேதி முதல், அண்ணாநகருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
தொழிலாளர் ஆணையரகம் மற்றும் அதன் சார்நிலை அலுவலகங்களுக்காக, சென்னை அண்ணா நகரில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை கடந்த ஆக., 25ல், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையடுத்து, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தொழிலாளர் இணை ஆணையர் - 1, 2 ஆகிய அலுவலகங்கள், புதிய அலுவலகக் கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை:
தொழிலாளர் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள், அண்ணா நகர், 6வது அவென்யூவில் உள்ள 'பி - பிளாக்'கில், 'தொழிலாளர் ஆணையரகம், தொழிலாளர் அலுவலர் குடியிருப்பு வளாகம்' என்ற புதிய முகவரியில், வரும் 10ம் தேதி முதல் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

