/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பத்மாவதியார் சாலையில் தெரு விளக்கு சீரமைப்பு
/
பத்மாவதியார் சாலையில் தெரு விளக்கு சீரமைப்பு
ADDED : நவ 07, 2025 12:20 AM

சென்னை: கோபாலபுரம் பத்மாவதியார் சாலையில் உள்ள தெரு விளக்குகள் சீரமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கோபாலபுரத்தில், பத்மாவதியார் சாலை உள்ளது. இது, பீட்டர்ஸ் சாலை - அவ்வை சண்முகம் சாலையை இணைக்கும் பிரதான சாலை.
இங்கு, மாநகராட்சி சார்பில், 20 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள தெரு விளக்குகள் சரிவர எரியாததால், இரவு நேரங்களில் அப்பகுதி, கும்மிருட்டாக மாறிவிடுகிறது.
இதனால், நடந்து செல்லவே அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
பாதசாரிகள் வசதிக்காக, அகலமான நடைபாதை அமைத்த மாநகராட்சி, தெரு விளக்கு பராமரிப்பில் மெத்தனமாக இருந்ததால், இரவு நேரங்களில் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களிலிருந்து பெட்ரோல் திருட்டும் நடந்து வந்தது.
இதுகுறித்து நமது நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானதை தொடர்ந்து, நேற்று தெரு விளக்குகள் சீரமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

