UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 09:56 PM
அம்பத்துார்: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, 40 வயது தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்; மற்றொரு தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் துலால், 40; சலீம், 30. இருவரும், அம்பத்துார், மேனாம்பேடு, இந்திரா காந்தி நகர் ஐந்தாவது தெருவில் கட்டடப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கட்டடத்திற்கு சாரம் கட்டும் பணியில், நேற்று மாலை இருவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே சென்ற, மின் கம்பி உரசியுள்ளது.
இதில், மின்சாரம் பாய்ந்து இருவரும் துாக்கி வீசப்பட்டனர். அதில், துலால் உடல் கருகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய சலீமை, அங்கிருந்தோர் மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
