ADDED : நவ 05, 2026 05:30 PM
அ நிறம் | அளவு
மாங்காடு: பணியின்போது மின்சாரம் பாய்ந்து, கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 30; கட்டட தொழிலாளி. இவர், மாங்காடு அருகே, அய்யப்பன்தாங்கல் செல்லும் சாலையில், புதிதாக கட்டப்படும் கடைகளுக்கு தளம் அமைக்கும் பணியில் இன்று (நவ.,5) ஈடுபட்டார்.
அதற்காக, சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் கையில் வைத்திருந்த ஈரமான கட்டை, எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் உரசியுள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட சக்கரவர்த்தியை, அங்கிருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், வரும் வழியிலேயே அவர் இறந்தது தெரியவந்தது. மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
