/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாரியத்தின் அரைகுறை பணியால் லட்சுமி டாக்கீஸ் சாலை படுமோசம்
/
வாரியத்தின் அரைகுறை பணியால் லட்சுமி டாக்கீஸ் சாலை படுமோசம்
வாரியத்தின் அரைகுறை பணியால் லட்சுமி டாக்கீஸ் சாலை படுமோசம்
வாரியத்தின் அரைகுறை பணியால் லட்சுமி டாக்கீஸ் சாலை படுமோசம்
ADDED : மார் 17, 2025 02:51 AM

அமைந்தரை:அண்ணா நகர் மண்டலம், அமைந்தகரை அருகில், ஷெனாய் நகர், லட்சுமி டாக்கீஸ் சாலை உள்ளது. இச்சாலையில், இரண்டு தனியார் மருத்துவமனை உட்பட குடியிருப்புகள், நிறுவனங்கள் உள்ளன.
அண்ணா நகரில் இருந்து வரும் வாகனங்களில் சிக்னலை தவிர்ப்பதற்காக, இச்சாலையை கடந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்வர்.
அதேபோல், நாதன முனி தெரு, கல்லறை சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, டி.பி.,சத்திரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும், இச்சாலையை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையில், சில நாட்களுக்கு முன், குடிநீர் வாரிய பணிக்காக பல மீட்டர் துாரம் பள்ளம் தோண்டியது. அதன்பின், முறையாக சீரமைக்காமல் விட்டதால், படுமோசமாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சோமசுந்திரம், 68, கூறியதாவது:
லட்சுமி டாக்கீஸ் சாலையில், வாரியம் தோண்டிய பள்ளத்தில், தினமும் விபத்தில் சிக்கி வருகின்றனர். வயதானோர் நடந்து செல்ல முடியாமல் தடுமாறி கீழே விழுகின்றனர்.
இந்த அரைகுறை பணி குறித்து பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.