ADDED : நவ 11, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டையில், 7.47 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சலவைக்கூடம் மற்றும் நுாலகம் திறக்கப்பட்டன.
அடையாறு மண்டலம், 169வது வார்டு, சைதாப்பேட்டை, ஜோதியம்மாள் தெருவில் 4.65 லட்சம் ரூபாயில், 500 சதுர அடி பரப்பில், ஒரு சலவைக் கூடம் கட்டப்பட்டது.
அதே வார்டு, ஹாமில்டா பூங்காவில் 2.82 லட்சம் ரூபாய் செலவில், 2,000 புத்தகங்கள் பாதுகாக்கும் வகையில், 500 சதுர அடி பரப்பில், ஒரு நுாலகம் கட்டப்பட்டது. இரண்டு கட்டடங்களும், மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன.

