/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எதிரிகளுடன் சமாதானம் பேசியதால் வக்கீல் கொலை * நடிகரின் முன்னாள் கார் ஓட்டுநர் வாக்குமூலம்
/
எதிரிகளுடன் சமாதானம் பேசியதால் வக்கீல் கொலை * நடிகரின் முன்னாள் கார் ஓட்டுநர் வாக்குமூலம்
எதிரிகளுடன் சமாதானம் பேசியதால் வக்கீல் கொலை * நடிகரின் முன்னாள் கார் ஓட்டுநர் வாக்குமூலம்
எதிரிகளுடன் சமாதானம் பேசியதால் வக்கீல் கொலை * நடிகரின் முன்னாள் கார் ஓட்டுநர் வாக்குமூலம்
ADDED : ஏப் 03, 2025 12:42 AM
சென்னை,'எதிரிகளிடம், 25 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு சமாதனமாக போகச்சொன்னதால், வழக்கறிஞர் வெங்கடேசனை வெட்டிக் கொன்றோம்' என, நடிகர் கருணாசின் முன்னாள் கார் ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை, ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 43; வழக்கறிஞர். நடிகர் கருணாஸ் நடத்தி வரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாக இருந்தார்.
கடந்த மாதம் 27ல், விருகம்பாக்கம் கணபதிராஜ் நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை குறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த கார்த்திக்....., அவரது நண்பர் ரவி.... ஆகியோரை கைது செய்துள்ளனர்.
போலீசாரிடம், கார்த்திக் அளித்துள்ள வாக்குமூலம்:
சில ஆண்டுகளுக்கு முன், கருணாசிடம் கார் ஓட்டுநராக இருந்தேன். அப்போது, எனக்கு வெங்கடேனுடன் பழக்கம் ஏற்பட்டது.
நான் நாங்குநேரில் நடந்த குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி, சிறை செல்ல வேண்டி இருந்தது. என்னை ஜாமினில் எடுத்து, தன் கார் ஓட்டுநராக வெங்கேடசன் வைத்துக் கொண்டார்.
திருநெல்வேலியில் நடந்த கொலை ஒன்றில் எனக்கு தொடர்பு இருப்பதாக, போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
என் உயிருக்கு நாள் குறித்து செயல்பட்டு வந்த எதிரிகள் சிலருடன், வெங்கடேசன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதை கண்டித்தேன். என் பேச்சுக்கு அவர் மதிப்பு அளிக்கவில்லை.
கடந்த 2022ல், திருநெல்வேலி மஞ்சங்குளம் பகுதியில், புது மாப்பிள்ளையான என் உறவினர் சாமிதுரை, 26 என்பவரை, ரவுடி ராக்கெட் ராஜா தரப்பினர் கொலை செய்தனர்.
பழிக்கு பழியாக இந்த கொலை நடந்தாலும், நான் தான் நேரடி சாட்சி. இதனால், என் உயிருக்கு எதிரிகள் நாள் குறித்து, சமயம் பார்த்து காத்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல, 'ராக்கெட் ராஜா தரப்பினர், 25 லட்சம் ரூபாய் தருவதாக கூறுகின்றனர். அதை வாங்கிக்கொண்டு, சாமிதுரை கொலை வழக்கில் சமாதனமாக போய் விடு' என, வெங்கடேசன் என்னை கட்டாயப்படுத்தினார்.
இது, எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நான், வெங்கடேசன், ரவி ஆகியோர், மது குடித்து போதையில் இருந்தோம். அப்போதும் சமதானம் குறித்து அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஆத்திரமடைந்த நான், 'நீ இனத்துரோகி, கூடவே இருந்து குழி பறிக்கிறாய்' என, திட்டியபடி, சமையல் அறையில் இருந்த அரிவாளை எடுத்து வந்து, நானும் ரவியும் சேர்ந்து வெங்கடேசனை வெட்டி கொன்றோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
***

