/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழல் சிறையில் வக்கீல்கள் முற்றுகை
/
புழல் சிறையில் வக்கீல்கள் முற்றுகை
ADDED : செப் 22, 2024 06:41 AM
புழல்,: புழல் சிறையில் சனிக்கிழமை தோறும் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு நேரம் ஒதுக்கப்படும். தற்போது ஒருநாள் முன்னதாக ஆன்லைனில் பதிவு செய்து, ஐந்து கைதிகளை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதியளிக்கிறது. இதற்கு முன் ஒரே நேரத்தில் 10 கைதிகளை சந்திக்க சிறைத்துறை அனுமதியளித்தது. இதை மீண்டும் கொண்டு வர கோரியும், சிறைக்கு வெளியே அடிப்படை வசதிகளும் இல்லாததை சுட்டிக்காட்டியும், நேற்று 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், சிறை முன் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அவர்களுடன் சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பேச்சு நடத்தினார். பின், மேலதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லி வசதிகள் மேம்படுத்தப்படும் என கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது.