/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
/
வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
ADDED : அக் 14, 2025 01:13 AM

சென்னை, உயர் நீதிமன்றம் அருகே, வழக்கறிஞர் ராஜிவ்காந்தி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வழக்கறிஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன், வழக்கறிஞர் ராஜிவ்காந்தி தாக்கப்பட்ட விவகாரத்தில், காவல் துறை மற்றும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தில், பார் கவுன்சில் இதுவரை புகார் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.
வழக்கறிஞர்களை பாதுகாக்க வேண்டிய பார் கவுன்சில், தன் கடமையை மறந்துவிட்டது எனக் கூறி, உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் அருகே நேற்று ஊர்வலமாக சென்ற வழக்கறிஞர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் முன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் கீதாவிடம், சம்பவம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மனு அளித்தனர்.
முன்னதாக வழக்கறிஞர்கள் போராட்டத்தின் போது, திருவள்ளூரைச் சேர்ந்த வி.சி., நிர்வாகி ஒருவர், வழக்கறிஞர் காலில் காரை ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.