/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீதிமன்ற புறக்கணிப்பு வக்கீல்கள் போராட்டம்
/
நீதிமன்ற புறக்கணிப்பு வக்கீல்கள் போராட்டம்
ADDED : ஜூன் 13, 2025 12:14 AM

ஆலந்துார், ஆலந்துார் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள் நேற்று, நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாலுகாவுக்கு ஒரு நீதிமன்றம் என்ற வகையில், சோழிங்கநல்லுார், பல்லாவரத்தில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஆலந்துார் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள், சோழிங்கநல்லுார், பல்லாவரம் நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
வழக்கறிஞர்கள் சங்க ஒப்புதல் இன்றி வழக்குகள் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலந்துார் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று, நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்க செயலர் கார்த்திகேயன் உள்ளிட்ட, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.