/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடியிருப்பு திட்டங்களுக்கு தலைவர்கள் பெயர்
/
குடியிருப்பு திட்டங்களுக்கு தலைவர்கள் பெயர்
ADDED : ஜன 05, 2024 12:52 AM
சென்னை,''சென்னையில் பல்வேறு இடங்களில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக கட்டப்படும் குடியிருப்புகளுக்கு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படும்,'' என சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அவர் நேற்று ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது:
சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், நந்தனம் ஜோகி தோட்டம் பகுதியில், 58.65 கோடி ரூபாயில், 416 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி தாமஸ் சாலை பகுதியில், 470 வீடுகள், தி.நகர் தொகுதி வாழைத்தோப்பு பகுதியில் 504 வீடுகள், மயிலாப்பூர் தொகுதி வன்னியபுரம் பகுதியில் 216 வீடுகள், இதே தொகுதி வன்னியம்பதி பகுதியில் 500 வீடுகள் என, மொத்தம், 335.97 கோடி ரூபாயில், 2,106 வீடுகள் கட்டும் பணிகள் பல்வேறு நிலைகளில் நடந்து வருகின்றன.
இந்த பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. இங்கு கட்டுமான பணிகளை விரைந்து முடித்து வீடுகளை ஒப்படைக்க வேண்டும்.
இதில் திட்டப்பகுதிகள், அவை அமைந்துள்ள இடத்தின் பெயரால் அடையாளப்படுத்தப்படுகின்றன. இதற்கு மாறாக மக்களுக்கு தொண்டாற்றிய தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
★★★