/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் அரினி சி.சி., அணி அசத்தல்
/
' லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் அரினி சி.சி., அணி அசத்தல்
' லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் அரினி சி.சி., அணி அசத்தல்
' லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் அரினி சி.சி., அணி அசத்தல்
ADDED : நவ 17, 2025 12:52 AM

சென்னை: 'லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் லீக் போட்டியில், அரினி சி.சி., அணி, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில், ஹாரிங்டன் வாரியஸ் அணியை தோற்கடித்தது.
ப்ளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமியின், ஜெயலட்சுமி லீக் கம் நாக் அவுட் கிரிக்கெட் போட்டி, வார இறுதி நாட்களில் நடக்கின்றன. இதில், பல்வேறு நிறுவனம், அகாடமிகளை சேர்ந்த ஒன்பது அணிகள், தலா எட்டு லீக் போட்டிகள் அடிப்படையில் மோதுகின்றன.
நேற்று, வேப்பேரியில் நடந்த லீக் ஆட்டத்தில், ஹாரிங்டன் வாரியர்ஸ் மற்றும் அரினி சி.சி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஹாரிங்டன் வாரி யர்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களி ல் ஆறு விக்கெட் இழப்புக்கு, 198 ரன்களை அடித்தது.
அணியின் வீரர் சங்கர், 40; சிறப்பாக ஆடி, 54 பந்துகளில் 5 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் குவித்தார். அரினி சி.சி., அணி பந்துவீச்சாளர் லோகநாதன், 30, என்பவர், இரண்டு விக்கெட்டுகளையும், யோகேஷ், 30, மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அடுத்து, இலக்கை துரத்திய அரினி சி.சி., அணி, தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்தி, 16.4 ஓவர்களில், வெறும் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து, 201 ரன்களை அடித்து, ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணியின் வீரர் வல்லரசு, 25; என்பவர், 46 பந்துகளில் 7 சிக்சர், 13 பவுண்டரிகளுடன், 103 ரன்கள் அடித்து, அரினி சி.சி., அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

