/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில அளவிலான சதுரங்கம்: 450 சிறுவர் - சிறுமியர் உற்சாகம்
/
மாநில அளவிலான சதுரங்கம்: 450 சிறுவர் - சிறுமியர் உற்சாகம்
மாநில அளவிலான சதுரங்கம்: 450 சிறுவர் - சிறுமியர் உற்சாகம்
மாநில அளவிலான சதுரங்கம்: 450 சிறுவர் - சிறுமியர் உற்சாகம்
ADDED : நவ 17, 2025 12:51 AM

சென்னை: சே லையூ ரில் நேற்று நடந்த மாநில அளவிலான சதுரங்க போட்டியில், 450 சிறுவர் - சிறுமியர் உற்சாகமாக பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
ஸ்ரீஹயக்ரீவர் சதுரங்க அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான மா நில சதுரங்க போட்டி, சேலையூரில் உள்ள ஸ்ரீகுகன்ஸ் பள்ளி வளாகத்தில், நேற்று காலை துவங்கியது.
இதில், எட்டு, பத்து, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட, இரு பாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும், தலா எட்டு சுற்றுகள் வீதம் போட்டிகள் நடந்தன. 'பிடே' விதிப்படி, சுவிஸ் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, கடலுார், உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்து, 450 மாணவ - மாணவியர் உற்சாகமாக பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டியில், எட்டு வயது பிரிவில் பங்கேற்ற அனைவருக்கும் கோப்பை மற்றும் பரிசுகள் வழ ங்கப்பட்டன. தவிர, 200க்கும் மேற்பட்டோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.