/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'லீக் கம் நாக் அவுட்' டென்னிஸ் சென்னையில் நாளை துவக்கம்
/
'லீக் கம் நாக் அவுட்' டென்னிஸ் சென்னையில் நாளை துவக்கம்
'லீக் கம் நாக் அவுட்' டென்னிஸ் சென்னையில் நாளை துவக்கம்
'லீக் கம் நாக் அவுட்' டென்னிஸ் சென்னையில் நாளை துவக்கம்
ADDED : ஜூலை 11, 2025 12:23 AM
சென்னை சென்னை சிட்டி கிளப்களுக்கு இடையிலான 'லீக் கம் நாக் அவுட்' டென்னிஸ் போட்டி, சென்னையில் நாளை துவங்க உள்ளது.
தமிழக டென்னிஸ் சங்கம், ஆர்.டபிள்யூ.டி., ரியல் எஸ்டேட் நிறுவனம் இணைந்து, ஓபன் லீக் கம் நாக் அவுட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, நாளை துவங்க உள்ளன.
நுங்கம்பாக்கம், எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் அரங்கில், போட்டிகள் நடக்கின்றன. சென்னை சிட்டி கிளப்களுக்கு இடையிலான இப்போட்டியில், அண்ணா நகர் கே பிளாக், காஸ்மோபாலிடன் கிளப், காந்தி நகர் கிளப், இந்திரா நகர், மெட்ராஸ் கிளப், மெட்ராஸ் ஜிம்கானா, பிரசிடென்சி உள்ளிட்ட, 18 கிளப்களை சேர்ந்த 275 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதில், 25, 30, 45 மற்றும் 50 வயதுக்கு மேல் ஆகிய பிரிவுகளில், போட்டிகள் தனித்தனியாக நடக்கின்றன. ஒவ்வொரு கிளப்களும், இரண்டு அணிகள் வீதம் பங்கேற்கும்.
இப்போட்டியில், பிரபல வீரர்களான சோம்தேவ், ராஜேஷ், விஜய் கண்ணன், அஜய் செல்வராஜ், கார்த்திக் கைலாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
போட்டிகள் தொடர்ந்து, செப்., 1ம் தேதி வரை, வார இறுதி நாட்கள் மட்டும் நடக்கின்றன.