/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - விஜயவாடா ரயிலில் எல்.எச்.பி., பெட்டிகள் இணைப்பு
/
சென்னை - விஜயவாடா ரயிலில் எல்.எச்.பி., பெட்டிகள் இணைப்பு
சென்னை - விஜயவாடா ரயிலில் எல்.எச்.பி., பெட்டிகள் இணைப்பு
சென்னை - விஜயவாடா ரயிலில் எல்.எச்.பி., பெட்டிகள் இணைப்பு
ADDED : ஏப் 23, 2025 12:47 AM
சென்னை,
சென்னை சென்ட்ரல் - விஜயவாடா விரைவு ரயிலில் வரும் ஜூன் 22ம் தேதி முதல் எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
விரைவு ரயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு எல்.எச்.பி எனப்படும் நவீன ரயில் பெட்டிகள், இணைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது, அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா மாநிலம் விஜயவாடா - சென்ட்ரல் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில் வரும் ஜூன் 22ம் தேதி முதல் எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.