/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்
/
எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 20, 2024 12:31 AM
சென்னை, பாலிசிகளுக்கான போனஸ் தொகையை உயர்த்தக்கோரி, அகில இந்திய எல்.ஐ.சி., முகவர்கள் சங்கத்தினர், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து, பழைய நிலையில் உள்ளதையே நடைமுறைப்படுத்த வேண்டும். பாலிசி எடுப்பதற்கான அதிக பட்ச நுழைவு வயதை, அனைத்து திட்டங்களுக்கும், 65 வயதாக உயர்த்த வேண்டும்.
பாலிசிதாரரை பாதிக்கும் காப்பீட்டின் மீதான ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும். பாலிசிகளுக்கான போனஸ் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.