தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கலங்கரை விளக்கம் – அடையாறு மேம்பால சாலை திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியீடு

கலங்கரை விளக்கம் – அடையாறு மேம்பால சாலை திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியீடு

கலங்கரை விளக்கம் – அடையாறு மேம்பால சாலை திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியீடு


UPDATED : அக் 23, 2026 12:00 AM

ADDED : அக் 22, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 12:00 AM ADDED : அக் 22, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க., பாலம் வரை, மேம்பால சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, மாநில நெடுஞ்சாலைத் துறை ‘டெண்டர்’ வெளியிடப்பட்டு உள்ளது.

கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க., பாலம் வரையிலான சாந்தோம் நெடுஞ்சாலை, மெரினா, சாந்தோம், அடையாறு பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருக்கிறது.

இந்த பகுதிகளில் பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், பிற நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கட்டடங்கள் நெருக்கமாக இருப்பதால், சாலைகளை அகலப்படுத்தும் வாய்ப்புகளும் குறைவாக உள்ளன.

எனவே , கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க., பாலம் வரை மேம்பால சாலை அமைக்கப்படும் என, தமி ழக அரசு, சட்டசபையில் அறிவித்தது.

இந்நிலையில், இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, மாநில நெடுஞ்சாலைத் துறை டெண்டர் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க., நகர் பாலம் வரை 4 கி.மீ., நீளத்திற்கு மேம்பால சாலை அமைக்கப்பட உள்ளது.

அதற்கான விரிவான திட்ட அறிக்கையை, 38.10 லட்சம் ரூபாயில் தயாரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

வழித்தடம் விபரம், தொழில்நுட்ப சாத்திய கூறுகள், சுற்றுச்சூழல் தாக்கம், கால்வாய் இணைப்பு, அணுகு சாலைகள் இணைப்பு, மாற்றுத்திட்டமிடல், வாகனங்கள் பெருக்கம், மொத்த திட்ட மதிப்பீட்டு செலவு, கட்டுமான பணிகள் நிலை, வரைபடங்கள் உள்ளிட்ட விபரங்கள் சேகரித்து அறிக்கையாக பெறப்படும்.

தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதலுக்கு பின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், கலங்கரை விளக்கம் – அடையாறு திரு.வி.க., பாலம் மேம்பால சாலை செய ல்படுத்துவதற்கான டெண்டர் வெளியிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us