/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லிட்டில் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் கிரீன் மாஸ்டர்ஸ் அணி சாம்பியன்
/
லிட்டில் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் கிரீன் மாஸ்டர்ஸ் அணி சாம்பியன்
லிட்டில் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் கிரீன் மாஸ்டர்ஸ் அணி சாம்பியன்
லிட்டில் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் கிரீன் மாஸ்டர்ஸ் அணி சாம்பியன்
ADDED : ஜூன் 01, 2025 12:36 AM

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் இயங்கிவரும் லிட்டில் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அகாடமி சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான, பிரேயர் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், கடந்த மாதம் துவங்கின.
கிரிக்கெட் பயிற்சி குழுக்களுக்கு இடையிலான இப்போட்டியில், ஐந்து அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 25 ஓவர் அடிப்படையில், 'லீக்' முறையில், புழல் தனியார் கல்லுாரி மைதானத்தில் நடந்தன.
இதில், அதிக போட்டியில் வெற்றிபெற்ற கிரீன் மாஸ்டர்ஸ் அணியும், லிட்டில் மாஸ்டர்ஸ் அணியும், இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இறுதிப் போட்டியில், முதலில் களமிறங்கிய கிரீன் மாஸ்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 25 ஓவர்களில், ஆறு விக்கெட் இழப்பிற்கு, 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சய், ரோஷன் முறையே 51, 38 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய லிட்டில் மாஸ்டர்ஸ் அணிக்கு, கிரீன் மாஸ்டர்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி தந்து, ரன் குவிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டனர்.
இதனால், லிட்டில் மாஸ்டர்ஸ் அணி, 25 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. அதனால், 23 ரன்களில் கிரீன் மாஸ்டர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.