/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிக்கனில் உயிருடன் புழு? ஹோட்டலில் சோதனை
/
சிக்கனில் உயிருடன் புழு? ஹோட்டலில் சோதனை
ADDED : ஜன 05, 2025 10:24 PM
போரூர்:போரூர் அடுத்த காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், நேற்று முன்தினம் இரவு 'ஆன்லைன்' மூலம் உலகளவில் பிரபலமான ேஹாட்டலில் சிக்கன் 'ஆர்டர்' செய்துள்ளார். அதில், புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதை, தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து, உணவு வழங்கிய பிரபல உணவகத்திற்கு நேரில் சென்று, சிக்கனில் புழு இருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பினார். ஆனால், உணவக ஊழியர்கள் அலட்சியமாக பதில் அளித்ததால், ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர் உணவு பாதுகாப்பு துறைக்கு 'ஆன்லைன்' மூலம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, உணவு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள், நேற்று அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
பின், செய்தியாளர்களிடம் செந்தில்குமார் பேசியதாவது:
உணவில் புழு இருந்தது தொடர்பாக உணவகத்திற்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்குள் விளக்கம் அளிக்க அவகாசம் கொடுத்துள்ளோம். 170 டிகிரி செல்சியஸில் கொதிக்கும் எண்ணெயில் புழு இறந்திருக்கலாம். ஆனால் அவர்கள் உயிரோடு இருந்ததாக கூறுகின்றனர்.
அதையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம், அத்துடன் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி, தனிப்பட்ட வகையில் சோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம். அறிக்கை வந்தபிறகே நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

