/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரிய ரத்தக்குழு உடைய பெண்ணுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
/
அரிய ரத்தக்குழு உடைய பெண்ணுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
அரிய ரத்தக்குழு உடைய பெண்ணுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
அரிய ரத்தக்குழு உடைய பெண்ணுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
ADDED : மே 09, 2025 01:00 AM

சென்னை, ரத்தம் தொடர்பான ஆபத்தான நோய் எதிர்ப்பு நிலை கொண்ட ஒரு பெண்ணுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மியாட் சர்வதேச மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது.
இது குறித்து, 'மியாட்' மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக் மதிவாணன், மயக்கம், தீவிர பிரிவு நிபுணர் கார்த்திக் மனோகரன் மற்றும் குருதியேற்றுத்துறை தலைவர் ஜோஸ்வா ஆகியோர் கூறியதாவது:
மாலத்தீவைச் சேர்ந்த 55 வயது பெண்ணுக்கு கல்லீரலில் கிருமி தொற்று இருந்தது. அவருக்கு, கல்லீரல் சிரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக ரத்த வாந்தி, அடிக்கடி மூக்கில் ரத்தக்கசிவு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதற்கு, அவசர கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அவரின் ஆயுள்காலம், ஆறு மாதங்கள் மட்டுமே என, மாலத்தீவு மருத்துவர்கள் மதிப்பிட்டனர்.
இதில் விரக்தியடைந்த அவர், மாலத்தீவில் உள்ள மியாட் மருத்துவ முகாமுக்குச் சென்று சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு, மூக்கில் ரத்தம் வடிதல் நிறுத்தப்பட்டது. அவரின் மகன் கல்லீரல் தானம் செய்ய தயாராக இருந்தார். இதற்கான அறுவை சிகிச்சைக்கு, சென்னை மியாட் சர்வதேச மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இங்குள்ள அதிநவீன தொழில்நுட்பம் வாயிலாக அவருக்கு நடத்திய சோதனையில், ஆசிய மக்களிடையே அரிதான ரத்தக்குழு உடையவராக இருந்தது தெரிந்தது. இதை கண்டறியாமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் இறப்புக்குகூட வழிவகுக்கும். எனவே, குறைந்தபட்ச ரத்த இழப்புடன் அறுவை சிகிச்சை செய்வது அவசியமானது. மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம், ரத்தமாற்று மருத்துவ நிபுணர்களுடன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சிக்கல்கள் இல்லாமல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் அவர் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார்.
இவ்வாறு கூறினர்.
கல்லீரல் மாற்று அறுவை சிச்சை பெற்ற குணமடைந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தார், மியாட் சர்வதேச மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாசை சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றனர்.