/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 'நறுவீ' மருத்துவமனையில் சாதனை
/
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 'நறுவீ' மருத்துவமனையில் சாதனை
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 'நறுவீ' மருத்துவமனையில் சாதனை
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 'நறுவீ' மருத்துவமனையில் சாதனை
ADDED : நவ 09, 2025 04:29 AM

சென்னை:வேலுார் நறுவீ மருத்துவமனையில், 64 வயது முதியவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து, நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் வெளியிட்ட செய்தி குறிப்பு:
ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்த, 64 வயது நபர் கல்லீரல் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலுார் நறுவீ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதித்ததில் அவரின் கல்லீரல் முழுமையாக செயலிழந்திருப்பதும், அவருக்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் சாலை விபத்தில், மூளைச் சாவடைந்த 24 வயது இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். 'ட்ரான்ஸ்டான்' எனும் தமிழக அரசின் உடல் உறுப்பு தான ஒழுங்குமுறை அமைப்பு வாயிலாக, அந்த இளைஞரின் கல்லீரல், நறுவீ மருத்துவமனையில் கல்லீரல் செயலிழந்த, முதியவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இளைஞரின் கல்லீரல், சென்னையில் இருந்து பாதுகாப்பாக, நறுவீ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, முதியவருக்கு பொருத்தப்பட்டது. சுமார் 12 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. தற்போது, அந்த முதியவர் நலமுடன், 21 நாள் தொடர் சிகிச்சையில் உள்ளார்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

