ADDED : ஜன 11, 2025 12:19 AM

அறிந்ததும், அறியாததும்! (பாகம் - 1)
ஆசிரியர்: மயிலாடுதுறை
ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்
பக்கம்: 228, விலை: ரூ.310
ஆன்மிகத்தில், நுாற்றுக்கணக்கான சந்தேகங்கள் மனதில் எழுகிறது. தெய்வ வழிபாட்டு முறை, விரதங்கள் அனுஷ்டிப்பு, வீட்டில் செய்யும் பூஜைகள், பரிகாரங்கள், மந்திரங்கள், வழிபாட்டு பாடல்கள், முன்னோர் வழிபாடு இன்னும் பொதுவான, எந்த விஷயமாக இருந்தாலும், கேள்வி - பதில் வடிவில் விளக்கமளிக்கிறது இந்த நுால்.
Detective Cooper - The case of the mysterious Map
ஆசிரியர்: Shoaib Aferoz
பக்கம்: 104, விலை: ரூ.150
பத்து வயது சிறுவன் சோயிப் அப்ரோஸ் ஆங்கிலத்தில் எழுதியுள்ள மர்ம நாவல், துப்பறியும் நிபுணர் எப்படியெல்லாம் சிந்திக்க வேண்டும், கிடைக்கும் சிறிய துப்பையும் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும், குற்றவாளியைப் பிடிக்க எத்தகைய தந்திரத்தைக் கையாள வேண்டுமென்பதை, சுவையாக, தெளிவாக அதுவும் ஆங்கிலத்தில் எழுதி இருப்பது பாராட்டிற்குரியது.

