ADDED : ஜன 18, 2026 05:27 AM

ஆசிரியர்: பிரபு சங்கர்
பக்கம்: 200, விலை: ரூ.280
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்த பெரும் வீரர்களின் வரலாற்றை ஆதாரப்பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் எடுத்துரைக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் நிகழ்ந்த உள்நோக்கங்களையும், ஆங்கிலேய ஆட்சியின் திட்டங்களையு ம், இந்திய தலைவர்களின் முடிவுகளையும் ஒரு மாற்று பார்வையில் கொண்டு வருகிறது. வாழ்க்கையை தியாகம் செய்த போராட்டக்காரர்களின் கதை உணர்வுபூர்வமாக எழுதப்பட்டு உள்ளது.
ஆசிரியர்: பி.சுவாமிநாதன்
பக்கம்: 120, விலை: ரூ.170
காசிக்கு சென்றால் எந்தெந்த படித்துறைகளில் நீராட வேண்டும், கங்கை நதியின் மகிமை, தீபாவளி அன்று அங்கு என்னென்ன விசேஷங்கள் நடக்கும், காசிக்கு சென்றால் ஏதாவது ஒன்றை விட்டுவிட்டு வர வேண்டும் என்கின்றனரே, அப்படி எதை விட வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும், இந்த நுாலில் உள்ளன. காசியில் பூக்கள் வாங்கினால் எப்படி இருக்கும், அந்த ஊரில் பறக்காத பறவை எது என்பது உள்ளிட்ட அதிசய தகவல்களும் அடங்கியுள்ளன. சிறந்த வழிகாட்டி நுால்.
சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
காசி

