/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோ - கோ போட்டி லயோலா ஒயிட்ஸ் அணி ' சாம்பியன் '
/
கோ - கோ போட்டி லயோலா ஒயிட்ஸ் அணி ' சாம்பியன் '
ADDED : ஆக 23, 2025 12:26 AM

சென்னை, 'பெர்ட்ரம்' நினைவு கோப்பையில், கல்லுாரி களுக்கு இடையிலான கோ - கோ போட்டி யில், சென்னை லயோலா ஒயிட்ஸ் அணி முதலிடத்தையும், கோவை பி.எஸ்.ஜி., அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
லயோலா கல்லுாரியின் நிறுவனர், 'பெர்ட்ரம்' நினைவு கோப்பை விளையாட்டு போட்டிகள், 91வது ஆண்டாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடந்து வருகின்றன.
இதில் கோ - கோ போட்டிக்காக, மாநிலத் தின் பல்வேறு பகுதி களில் இருந்து 16 அணிகள், 'நாக் அவுட்' முறையில் மோதின. இறுதிப் போட்டியில், சென்னை லயோலா ஒயிட்ஸ் அணி மற்றும் கோவை பி.எஸ்.ஜி., அணிகள் எதிர் கொண்டது.
ஆட்டம் முடிவில், 7 - 5, 13 - 12 என்ற கணக்கில் லயோலா ஒயிட்ஸ் அணி வெற்றி பெற்று, முதலிடத்தை தட்டிச் சென்றது.
கோவை பி.எஸ்.ஜி., அணி இரண்டாமிடம், சென்னை அவிச்சி கல்லுாரி மூன்றாமிடம், சென்னை எல்.ஓ.எச்.ஓ., அணி நான்காம் இடங்களை பிடித்தன.