/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'எம் - சாண்ட்' கடத்தல் இரண்டு பேர் கைது
/
'எம் - சாண்ட்' கடத்தல் இரண்டு பேர் கைது
ADDED : மார் 21, 2025 12:31 AM
கொடுங்கையூர்,
'எம் - சாண்ட்' மணல் கடத்திச் சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளரும், டிரைவரும் கைது செய்யப்பட்டனர்..
பெரம்பூர் வட்டாட்சியர் உமா மகேஸ்வரி, நேற்று முன்தினம், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பிரதான சாலை சிக்னல் அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே வந்த லாரியை மடக்கி விசாரித்தார். உரிய அனுமதியின்றி எம் - சான்ட் மணல் கடத்தப்படுவது தெரியவந்தது.
அதன்படி, 2.5 யூனிட் மணல், லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
வட்டாட்சியர் அளித்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, செங்குன்றத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் அஜித், 28, லாரி உரிமையாளர் செல்வமணி ஆகியோரை கைது செய்தனர்..