/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் சீர் செய்யப்படாத மேட்லி 2வது தெரு
/
பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் சீர் செய்யப்படாத மேட்லி 2வது தெரு
பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் சீர் செய்யப்படாத மேட்லி 2வது தெரு
பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் சீர் செய்யப்படாத மேட்லி 2வது தெரு
ADDED : நவ 07, 2025 12:18 AM

தி.நகர்: பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும், முறையாக சாலை சீரமைக்கப்படாததால், தி.நகர் மேட்லி 2வது தெரு பல்லாங்குழியாக மாறி உள்ளது.
கோடம்பாக்கம் மண்டலம், 141வது வார்டு தி.நகர் மேட்லி 2வது தெரு அமைந்துள்ளது. இத்தெருவில் சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மற்றும் தனியார் பள்ளி என, இரு பள்ளிகள் அமைந்துள்ளன.
இச்சாலையில் உள்ள பாதாள சாக்கடை 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. தற்போது, மக்கள்தொகை பெருக்கத்தால், அதன் கொள்ளளவு போதாமல், தினசரி சாலையில் கழிவுநீர் வழிந்தோடி தேங்குவது வாடிக்கையாக இருந்தது.
இதையடுத்து, சிமென்ட் சாலை பெயர்த்தெடுக்கப்பட்டு, புது கழிவுநீர் குழாய் புதைக்கப்பட்டது. இப்பணிகள் முடிந்து, சாலை இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், சாலை மேடு பள்ளமாகி மாணவ - மாணவியர் மற்றும் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.முருகன், 57; என்பவர் கூறுகையில், ''இச்சாலையில் ஆறு மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. இன்னும் சாலை சீரமைக்கப்படவில்லை. பக்கத்தில் நன்றாக உள்ள சாலைகளை மீண்டும் புனரமைத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் அதிகாரிகளின் கண்களில், மேட்லி 2வது தெரு இதுவரை படவில்லை.
மழையின் போது, இருசக்கர வாகனங்களில் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

